Chennai
oi-Shyamsundar I
சென்னை: கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எண்ணம் கிடையாது என்று நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசன் கர்நாடகா திரைப்பட வர்த்தக சபைக்கு கடிதம் எழுதியுள்ளார். இதை இன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கமல்ஹாசன் தரப்பு வழங்கியது. ஆனால் இந்த கடிதத்தின் சாராம்சத்தை நீதிபதி மகேஷ் நாகப்பிரசன்னா ஏற்றுக்கொள்ளவில்லை.
கமல்ஹாசன் எழுதிய கடிதத்தை இன்று அவர் தரப்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. ஆனால் அதில் ஒரு வார்த்தை மிஸ் ஆகிறது என்று நீதிபதி மகேஷ் நாகப்பிரசன்னா விமர்சனம் செய்தார். அதாவது மன்னிப்பு என்ற வார்த்தை மிஸ் ஆகிறது என்று குறிப்பிட்டார். இதற்கு கமல் ஹாசன் தரப்பு.. நடிகர் கமல்ஹாசன் கன்னடம் மீது தனக்கு உள்ள காதலை வெளிப்படுத்தி உள்ளார்.

அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். மற்றபடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்க கூடாது என்று கூறினர். இதற்கு நீதிபதி மகேஷ் நாகப்பிரசன்னா ஏன் சுற்றி வளைத்து பேசுகிறீர்கள். அன்பை வெளிப்படுத்த பல விதங்கள் உள்ளன. ஆனால் மன்னிப்பு கேட்க ஒரே ஒரு விதம்தான் உள்ளது. பிரச்சனை இல்லை சார், நீங்கள் சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். கடைசியில ஒரு வாக்கியம் சேர்த்திருந்தா தீர்ந்திருக்கும்னு நான் சொல்கிறேன்.
நீங்கள் ஈகோவில் இருந்து வெளியே வராமல் இருக்கிறீர்கள். அது கமல ஹாசனாகவோ அல்லது யாராகவோ இருக்கலாம், அது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது. உங்கள் பேச்சு அதற்கு வழிவகுத்தது, உங்கள் பேச்சு மூலம்தான் அதை சரி செய்ய வேண்டும். அதற்கு மன்னிப்பு என்ற வார்த்தையை கேட்க வேண்டும், என்று நீதிபதி மகேஷ் நாகப்பிரசன்னா கூறி உள்ளார்.
வழக்கில் என்ன நடந்தது?
இதில் சரமாரி கேள்விகளை எழுப்பிய கர்நாடக உயர் நீதிமன்றம், யாராக இருந்தாலும், கமல்ஹாசனாக இருந்தாலும் கூட, நீங்க கமலா இருங்க.. யாரா வேணா இருங்க… மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. நீங்கள் பெரிய நடிகராக இருந்து கொண்டு அப்படி பேசி இருக்க கூடாது.
இந்த நாட்டின் பிரிவினை மொழிவாரி அடிப்படையில்தான் நடந்தது. ஒரு பொது நபர் இதுபோன்ற அறிக்கையை வெளியிட முடியாது. இதன் காரணமாக அமைதியின்மை, நல்லிணக்கமின்மை ஏற்பட்டுள்ளது. கர்நாடக மக்கள் மன்னிப்பு கேட்க மட்டுமே சொன்னார்கள். இப்போது நீங்கள் மன்னிப்பு கேட்காமல் இங்கு பாதுகாப்பு தேடி வருகிறீர்கள். நீங்கள் என்ன அடிப்படையில் அப்படி பேசினீர்கள், நீங்கள் ஒரு வரலாற்று ஆசிரியரா, மொழியியல் நிபுணரா? என்ன அடிப்படையில் பேசினீர்கள்?
நீங்கள் மன்னிப்பு கேட்டிருந்தால் போதுமானதாக இருந்திருக்கும். மணிரத்னம் படம் என்பதால் படத்தின் முக்கியத்துவம் உங்களுக்குத் தெரியும், ஆனால் நீங்கள் மன்னிப்பு அறிக்கை (மன்னிப்பு) வெளியிட முடியாது என்று கூறுகிறீர்கள்.
நீங்களே உருவாக்கிய பிரச்சனைக்கு அரசாங்கத்தின் ஆதரவை எப்படி கேட்கிறீர்கள். நீங்கள் பேசிவிட்டு அதற்கு அரசு பாதுகாப்பு தர வேண்டுமா? மொழி என்பது மக்களுடன் இணைந்த ஒரு உணர்வு. நீங்கள் ஒரு சாதாரண மனிதர் அல்ல, நீங்கள் ஒரு பொது நபர். சமூக ஊடகங்களில் எழுதுபவர்கள் கூட விசாரிக்கப்படுகிறார்கள். நீங்கள் பெரிய நபர்.
நீங்கள் பெரிய தவறுதலாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இப்போது கர்நாடகாவில் படத்தை ஓட்ட வேண்டும் என்கிறீர்கள். பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் என்பது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் அளவுக்கு இருக்கக் கூடாது. நீங்கள் மன்னிப்பு கேட்கலாம், மன்னிப்பு கேட்டால் இங்கே வரும் வசூல் மூலம் சம்பாதிக்கலாம். நீங்கள் பேசியதை, திரும்பப் பெறலாம். அந்த பேச்சில் இப்போதும் உறுதியாக நிற்கிறீர்களா? இது தமிழ் மற்றும் கன்னட அறிக்கை சண்டை கிடையாது. நீங்கள் பேசியதால் வந்த பிரச்சனை.
வாய் தவறி ஏதேனும் நடக்கலாம். ஆனால் தெரிந்த பேசிய விஷயங்கள் அப்படி இல்லை. நீங்கள் பேசிய வார்த்தையைத் திரும்பப் பெற முடியாது, ஆனால் மன்னிப்பு கேட்கலாம். உடைந்த முட்டையை மீண்டும் சேர்க்க முடியாது என்று நீதிபதிகள் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.