Press "Enter" to skip to content

2-வது டெஸ்ட்: இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு- இந்திய அணியில் 3 மாற்றம்

பர்மிங்காம்:

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.

இந்த நிலையில் இரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் 3 மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பும்ரா, சாய் சுதர்சன், ஷர்துல் தாகூர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார், ஆகாஷ் தீப் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பர்மிங்காம் மைதானத்தில் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சும், போக போக பேட்டிங்குக்கும் அனுகூலமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இங்கு இதுவரை எந்த ஆசிய அணியும் வெற்றி பெற்றதில்லை. இந்திய அணி 8 டெஸ்டில் ஆடி 7-ல் தோல்வியும், ஒன்றில் டிராவும் கண்டுள்ளது. அதனால் இங்கிலாந்தின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டி இந்தியா சரித்திரம் படைக்குமா அல்லது மறுபடியும் பணிந்து போகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Source link